செந்தமிழ்சிற்பிகள்

ஆ.சிங்காரவேலனார் (1855 - 1931)

ஆ.சிங்காரவேலனார் (1855 - 1931)

அறிமுகம் 

1855ல் சென்னையில் பிறந்த ஆ. சிங்காரவேலனார்  அவர்கள் ஒரு கல்வியாளர் மற்றும் கலைக்களஞ்சியத் தொகுப்பாளர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் சமசுகிருத மொழிகளை அறிந்தவர் . தமிழில் முதற் கலைக்களஞ்சியங்களில் ஒன்றான கோஸம் என்ற நூல்வகையைச் சேர்ந்த ‘அபிதான சிந்தாமணி’யின்  ஆசிரியர். 

சொற்ப சம்பளம் பெற்ற ஒரு தமிழாசிரியர் , இவ்வரிய கருவூலத்தினை அச்சில் ஏற்றி, மக்களுக்குக் கிடைக்கச் செய்ய ஆதரவு தேடி, அலைந்து வள்ளல் பாண்டியத் துரைசாமி தேவர் அவர்களின் ஒத்துழைப்புடன் இருபதாண்டு  உழைப்பிற்கும், அலைச்சலுக்கும் பிறகு நூல் வடிவில் கொணர்ந்த பெருமை உடையவர்.

தமிழ்ப்பணி 

  • தன்னுடைய நண்பரும் சென்னை பச்சையப்ப முதலியார் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியருமான சி.கோபாலராயர் தூண்டுதலின் பேரில் "புராணநாம சந்திரிகை" என்ற நூலை “புராண நாமாவளி” என்று பெயரிட்டு எழுதத் தொடங்கி அதனை பெயரகராதியாக , கலைக் களஞ்சியமாக தொடர்ந்தார். 
  • சிங்காரவேலு முதலியார், சென்னை, பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக வேலை பார்த்துக்கொண்டு தன் அன்றாட அலுவல்களுக்கு மேல் நேரம் தேடி பல்லாயிரம் பக்கங்கள் கையெழுத்துப் படியாக எழுதிச் சேர்த்தார். 
  • ஊர் ஊராகச் சென்று சிறு வெளியீடுகளையும் ஏடுகளையும்  செவிவழிக் கதைகளையும் திரட்டினார். தலபுராணங்களை ஓதுவார்களிடமிருந்து கேட்டு எழுதிக்கொண்டார். 
  • நாடோடிகளான கதைசொல்லிகள், அரிகதைச் சொற்பொழிவாளர்கள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், நாட்டு வைத்தியர்கள், பைராகிகள் போன்ற பலதரப்பட்ட மக்களை சந்தித்து தகவல்களை திரட்டினார்.
  • இந்திய இலக்கியங்கள், புராணங்கள், சிந்தனைகள், ஆசாரங்கள், பழங்கதைகள், இலக்கியச் செய்திகள் ஆகியவை அகர வரிசையில் தொகுத்தார். 
  • அறிவியல் செய்திகள் அக்காலகட்டத்தில் எப்படிப் பார்க்கப்பட்டன என்பதற்கான ஆதாரமாகவும், நவீன கலைக் களஞ்சியங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும் இந்த தொகுப்பு அமைந்தது .

படைப்புகள் 

  • அபிதான சிந்தாமணியை 1890 ஆம் ஆண்டில் இவர் தொகுத்து மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு 1048 பக்கங்களுடன் வெளிவந்தது.
  • இவரது மைந்தர் ஆ.சிவப்பிரகாச முதலியார் இரண்டாம் பதிப்பை  1634 பக்கங்களுடன் வெளியிடப்பட்டார்

விருதுகள் /சிறப்புகள் 

"அபிதான சிந்தாமணியை" ஆழ்ந்து படித்தால் இவரின் தமிழ்த் தொண்டு "தமிழ்த்தாத்தா" உ. வே. சாமிநாதையருக்கு நிகரானது என்பது புலனாகும்.